Soyez Préparés

SOYEZ PRéPARéS

ஒரு அவசரகால நிலைமையில் எவ்வாறு தயாராக இருத்தல் வேண்டும்

ஒன்ராறியோ மக்கள் பனிப்புயல்,மின்சாரத் தடை போன்றவற்றில் இருந்து புயல் மற்றும் தொழில் துறை விபத்துக்கள் போன்ற எல்லா விதமான அவசரகால் நிலைமைகளையும் சந்தித்து வருகிறார்கள்.

அவசரகால நிலைமைகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம். இதனால் தயாராக இருப்பது முக்கியமானது. ஏனெனில் உதவிகள் வந்து சேருவதற்கான நேரத்தை இது எடுக்கின்றது . இதனால் ஒவ்வொருவரும் அவசரகாலத் திட்டம் ஒன்றையும் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு போதுமான பொருட்களைக் கொண்ட பொதியையும் தயார் செய்தல் வேண்டும்.

படி 1: ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்

ஒரு அவசரகால நிலைமையில், உங்களது நாளாந்த வசதிகள் அடைய முடியாது இருக்கலாம். அத்துடன் உங்களது வீட்டிலிருந்து வெளியேறும்படியும் கேட்கப்படலாம். நீங்கள்செய்ய வேண்டியதைப் பற்றிசிந்திப்பதே தயாராக இருப்பதற்குரிய முதலாவது படியாகும்.

உங்களது திட்டம் உள்ளடக்க வேண்டியவை

• வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படும் பட்சத்தில் இருக்கக்கூடிய இரு பாதுகாப்பான இடங்கள். ஒன்று, உள்ளூர் வாசிகசாலை, சமூக நிறுவனங்கள் போன்ற அண்மையிலுள்ள இடமாய் இருக்க வேண்டும். மற்றையது, ஆபத்தான நிலைமை பெரிய நிலப்பரப்பை தாக்குகின்ற பட்சத்தில், தூரத்திலுள்ள இடமாக இருத்தல் வேண்டும்.

• ஒரு குடும்பத் தொடர்பாடல் திட்டம். ஒரு அவசரகால நிலைமையில், உள்ளூர் தொலைபேசி இணைப்புக்களும் இணையங்களும் வேலை செய்யாது போகலாம். நீங்களும் உங்களது அன்புக்குரியவர்களும் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளக் கூடிய, நகருக்கு வெளியேயுள்ள ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி எண்களை அடையாளங்காணுங்கள்.

திட்டமிடல் உத்திகள்

வெளியேறுவதற்கு தயாராக இருங்கள். வெளியேறும் படி ஆலோசனை கூறப்படும் பட்சத்தில், ஒரு பாதுகாப்பான இடத்துக்கு எவ்வாறு பிரயாணம் செய்வீர்கள் என்பதைத் திட்டமிடுங்கள். அவசரகால உயிர் வாழ்தலுக்கான பொதியை தயாராக வைத்திருங்கள் (படி 2 யைப் பாருங்கள்).

உங்கள் செல்லப்பிராணி(கள்)க்காகத் திட்டமிடுங்கள். அநேகமாக, சேவை வழங்கும் பிராணிகள் மாத்திரமே வரவேற்பு நிலையங்களில் அநுமதிக்கப்படுகின்றன. முடிந்தால், நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்படும் பட்சத்தில், உங்கள் செல்லப்பிராணியைக் கவனித்துக் கொள்ளக்கூடியவர்களை அடையாளம் காணுங்கள்.

உங்கள் திட்டம் தயாராகும் போது

• உங்கள் திட்டம் பற்றி உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள்.

மருத்துவ உபகரணங்களை எவ்வாறு பயன்படுத்துவது அல்லது மருந்துகளை பாவிப்பது போன்ற ஏதாவது விசேட தேவைகளிருந்தால் அது பற்றி மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்.

• உங்கள் தனிப்பட்ட ஆதரவு வலையமைப்பின் பகுதியாக இருப்பதற்கு உடன்பட்டவர்களுடன் உங்கள் திட்டத்தை பயிற்சி செய்யுங்கள்.

• அவதானமாக இருப்பதுடன் அறிவுரைகளைப் பின்பற்றுங்கள். அவசரகால நிலைமையிலும் அதற்கு முன்னரும் அதனுடன் தொடர்பான செய்திகள் பற்றி அறிந்து கொண்டு இருங்கள். முதல் உதவியளர்கள், உத்தியோகத்தர்களின் அறிவுரைகளை பின்பற்றி நடங்கள்.

ஏனைய உத்திகள்

அவசரகால நிலைமை பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு உபயோகிக்கக்கூடிய இலக்கங்களைஅறிய (211, 311 அல்லது ஏனைய) உள்ளூர் நகர சபை உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். யாருக்காவது ஆரோக்கியம், பாதுகாப்பு, பொருட்கள் தொடர்பாக உடனடிக் காப்பு தேவைப்படும் பட்சத்தில் மாத்திரமே 911 யை உபயோகியுங்கள். பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கான பட்டியல் ஒன்று அவர்களிடம் உள்ளதா என்றும் அதில் நீங்கள் கையொப்பமிட வேண்டுமா என்றும் கேளுங்கள்.

எச்சரிக்கைச் செய்திகள் பெறுவதற்கு கையொப்பமிடுங்கள். இலவச எச்சரிக்கைச் செய்திகளை மின்னஞ்சல் அல்லது மின் செய்தியாகப் பெறுவதற்கு இணயத்தில் பதிவு செய்யுங்கள். www.ontario.ca/beprepared இற்கு விஜயம் செய்து இணைப்புக்களைத் தொடருங்கள்.

படி 2: அவசரகாலப் பொதியை உருவாக்குதல்

உங்கள் அவசரகால உயிர் வாழ்தல் பொதி, உங்களதும் உங்கள் குடும்பத்தவர்களதும் பாதுகாப்புக்கும் வாழ்வுக்கும், குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொண்டிருக்க வேண்டும். கீழ்வரும் சரிபாத்தல் பட்டியல் எல்லா அவசியமான பொருட்களையும் பட்டியல் படுத்துகிறது. இதில் உங்கள் தனித்துவமான தேவைகளைஅடைவதற்கான பொருட்களும், நீங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய பட்சத்தில், நீங்கள் வெளியேறுவதற்கு தயாராவதற்குத் தேவையான பொருட்களும் உள்ளன.

உங்கள் அவசரகால உயிர் வாழ்தல் பொதியில் இருக்க வேண்டியவை

வேண்டிய பொருட்கள்

 உணவும் ரின் திறப்பானும் (3 நாட்கள்க்குத் தேவையான பழுதடையாத இலகுவாகத் தயார் செய்யக்கூடிய பொருட்கள்)

 நீர் (ஒரு நளைக்கு ஒருவருக்கு 4 லீற்றர் வீதம்)

 பிளாஸ் லைற்

 றேடியோ (கிராங்க் அல்லது பற்றறி போடக்கூடியது)

 மேலதிக பற்றறிகள்

 கைத் தூய்மையாக்கிகள் அல்லது சிறு ஈரத்துவாய்கள்

 முதலுதவி பொதி

 மருந்துகள்

 முக்கியமான ஆவணங்கள் (அடையாள அட்டைகள், தொடர்புபாடல் பட்டியல்கள், மருந்துச்சிட்டைகள் போன்றன)

 ரொக்கப்பணம் (மேலதிகக் கார் திறப்பு)

 சீட்டி (தேவையேற்படும் போது கவனத்தை ஈர்ப்பதற்கு)

 உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கான விசேட பொருட்கள் (டயப்பர்ஸ், பாலகர்களுக்கான பால்மா)

 உங்களிடம் செல்லப்பிராணிகள் இருந்தால் அதற்கான உணவும் ஏனைய பொருட்களும்

வெளியேறுவதற்கான மேலதிக பொருட்கள்

 உடைகள், காலணிகள்

 தூக்க உறைகள் அல்லது போர்வைகள்

 தனிப்பட்ட பொருட்கள் (சவற்காரம், பற்பசை, ஏனைய கழிவறைப் பொருட்கள்)

 கார்ட் விளையாட்டுக்கள் அல்லது பிரயாண விளையாட்டுக்கள்

ஏனைய உத்திகள்

• எல்லா பொருட்களையும் இலகுவாக தூக்கக்கூடிய பிரயாணப்பையில் அல்லது சக்கரத்தில் உறுட்டக்கூடிய பொதியில் இடுங்கள்.

• உங்கள் அவசரகால உயிர் வாழ்தல் பொதியை இலகுவாக எடுக்கககூடிய இடத்தில் வையுங்கள்.

• உங்கள் கையடக்கத்தொலை பேசியை அல்லது மொபையில் கருவிகளை முழுமையாக மின்சக்தியேற்றி வையுங்கள்.

எனது அவசரகாலத் திட்டத்திற்கான தகவல்கள்

நீங்களும் மற்றவர்களும் கண்டு கொள்ளக்கூடிய இடத்தில் பின்வரும் படிவங்களையும் பூரணப்படுத்தி வையுங்கள். அதனைத் தேவை ஏற்படுமிடத்து புதுபித்துக் கொள்ளுங்கள். உங்கள் அவசரகால உயிர் வாழ்தல் பொதியிலும் ஒரு பிரதியை வையுங்கள்.

எனது பாதுகாப்பான இடங்கள்

• அவசரகால நிலைமையில், நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய தேவை ஏற்படலாம். இரு பாதுகாப்பான இடங்களைப் ப்ட்டியலிடுங்கள். ஒன்று, அண்மையிலுள்ள இடம். மற்றையது, தூரத்திலுள்ள இடம் (உங்கள் வதிவிடத்திற்கு வெளியே). உள்ளூர் வாசிகசாலை, சமய இடங்கள், அல்லது சமூக நிறுவனங்கள் போன்றன சில உதாரணகள்.

எனது பாதுகாப்பான இடங்கள்

எனது குடும்பத்தின் தொடர்பாடல் திட்டம்

ஒரு அவசரகால நிலைமையில், உள்ளூர் தொலைபேசி இணைப்புக்களும் இணையங்களும் வேலை செய்யாது போகலாம். நீங்களும் உங்களது குடும்பத்தவர்களும் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாறிக்கொள்ளக் கூடிய, நகருக்கு வெளியேயுள்ள ஒன்று அல்லது இரண்டு தொலைபேசி எண்களை அடையாளங்காணுங்கள். நகருக்கு வெளியே தொடர்பு இல்லாத பட்சத்தில், ஒரு சமுதாய அல்லது கலாசார நிலையத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

எனது குடும்பத்தின் தொடர்பாடல் திட்டம்

முக்கியமான மருத்துவ தகவல்கள்

உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவரினதும் ஆரோக்கிய நிலைமைகள், விசேட தேவைகள், மருந்துகள், உபகரணங்களைக் குறிப்பிடுங்கள்.

ஆரோக்கிய நிலை

முக்கியமான மருத்துவ தகவல்கள்

எனது அவசரகால உயிர் வாழ்தல் பொதி இருக்கும் இடம்

எங்கு உங்கள் பொதி வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி ஒரு குறிப்பு எழுதுங்கள், அதனால் மற்றவர்கள் உங்களுக்கு உதவும் போது அதை இலகுவாக கண்டு கொள்ளமுடியும்.

எனது அவசரகால உயிர் வாழ்தல் பொதி இருக்கும் இடம்